டாஸ்மாக்: தேங்கிக் கிடக்கும் மதுபானங்கள்

”டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனையாகாமல் தேங்கிக்கிடக்கிறது” என தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு மாநில வாணிபக் கழக நிர்வாகம் (டாஸ்மாக்), கடந்த அக்டோபர் 29ஆம் தேதி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது.

அதில், பணியாளர்களின் தொழிற்சங்க உரிமையை பறிக்கும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. அதற்கு சங்கத்தின் மூலம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

‘டாஸ்மாக்’ நிர்வாகத்தில் மதுபான சில்லரை விற்பனை பிரிவில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் என சுமார் 25 ஆயிரம் பணியாளர்கள் 20 ஆண்டுகளாக தொகுப்பூதிய ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

அவர்களுக்கு பணி பாதுகாப்பு எதுவும் இல்லாத நிலையில், அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையினையும் எதிர்கொண்டு வருகிறார்கள்.

சமீபகாலமாக ‘டாஸ்மாக்’ நிர்வாகம், மதுபானங்கள் கொள்முதல் செய்வதில், மது நுகர்வோர் விரும்பும் மதுபானங்களுக்கு மாறாக மற்ற வகைகளுக்கு முன்னுரிமை தரப்படுகிறது.

liquor stockpiles unsold in tasmac shops

இதனால் மதுக்கடைகளில் பெருமளவு மதுபானங்கள் விற்பனையாகாமல் தேங்கிக்கிடக்கின்றன.

பணியாளர்களை மிரட்டியும், அழுத்தம் கொடுத்தும் முறைகேடாக பணம் பறிக்கும் முறை தொடர்கிறது.

‘டாஸ்மாக்’ நிர்வாகத்தின் பணியாளர் விரோத நடைமுறைகள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அரசின் கவனத்துக்கு தெரிவித்து,

பணியாளர்கள் உரிமையை பறிக்கும் நிபந்தனைகள் கொண்ட ‘டாஸ்மாக்’ நிர்வாகம் வெளியிட்ட சுற்றறிக்கையை ரத்து செய்யவேண்டும்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களுக்கு பதிலாக வேறு நபர்களை பணி புரியவைத்து விட்டு வெளியே சென்று விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் ஆய்வின்போது டாஸ்மாக் பணியாளர்கள் இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், டாஸ்மாக் தலைமை அலுவலகம் அல்லது வங்கிகளுக்கு செல்லும் போது உரிய அனுமதி பெற்றுதான் செல்ல வேண்டும்” என தமிழ்நாடு மாநில வாணிபக் கழக நிர்வாகம் நேற்றுகூட எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெ.பிரகாஷ்

உலகக்கோப்பை கால்பந்து: வெளியேறியது ஜெர்மனி

சாமி சாமி பாடல்: வைரலில் ரஷ்ய பெண்கள் நடனம்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts