திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் அரசு அனுமதி பெற்று மது பரிமாறலாம் என தமிழக அரசு இன்று (ஏப்ரல் 24) அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பார்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் மட்டுமே மதுபானம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மேலும் சில இடங்களில் மதுபானம் வழங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
உள்துறை செயலாளர் பணீந்திரரெட்டி இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில், மாநாட்டு மண்டபம், கன்வென்ஷன் செண்டர், திருமண மண்டபம், விருந்து நடைபெறும் இடங்கள் மற்றும் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வணிக இடங்களில் சிறப்பு உரிமம் பெற்று மது பரிமாறலாம்.
இந்த இடங்கள் மாநகராட்சி பகுதிகளில் அமைந்திருந்தால் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
நகராட்சி பகுதிகளில் அமைந்திருந்தால் ஆண்டுக்கு 75,000 ரூபாயும் மற்ற இடங்களில் இருந்தால் 50,000 ரூபாயும் செலுத்த வேண்டும்.
ஒரு நாளுக்கு கட்டணம் செலுத்தியும் அனுமதி பெற்று நிகழ்ச்சிகளில் மது பரிமாறலாம். அப்படி ஒரு நாள் என்றால், மாநகராட்சி பகுதியாக இருந்தால் ரூ.11 ஆயிரம் ரூபாயும், நகராட்சி இடமாக இருந்தால் 7,500 ரூபாயும் மற்ற இடங்களாக இருந்தால் 5,000 ரூபாயும் செலுத்த வேண்டும்.
இதுவே வணிகம் அல்லாத, அதாவது வீடுகளில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகள், பார்ட்டிகளிலும் மது பரிமாறலாம். இதற்கு மாநகராட்சி பகுதியாக இருந்தால் ரூ.11 ஆயிரம் ரூபாயும், நகராட்சி பகுதியாக இருந்தால் 7,500 ரூபாயும் மற்ற இடங்களாக இருந்தால் 5,000 ரூபாயும் செலுத்தி அனுமதி பெற வேண்டும்.
பி.எல் 2 எனும் சட்டத்தின் சிறப்பு அனுமதி பெற்று மது விருந்து நிகழ்ச்சிகள் நடத்தப்படலாம். மாவட்ட ஆட்சியரின் அனுமதியோடு, மதுவிலக்குத்துறை சிறப்பு அனுமதி வழங்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உரிமம் பெற்றவர், இந்த நிகழ்ச்சிகளுக்கு காவல் கண்காணிப்பாளரிடமிருந்தும் தடையில்லா சான்றிதழைப் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!
எங்கள் நிறுவனத்துக்கும் திமுக முதல் குடும்பத்தினருக்கும் தொடர்பா?: ஜி ஸ்கொயர்