ஆதார் அட்டையுடன் மொபைல் எண்ணை இணைக்கும் செயல்முறை மிகவும் எளிமையானது. இதற்கு ஆதார் சேவா கேந்திராவிற்கு சென்று படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
ஆதார் அட்டையுடன் மொபைல் எண் இணைக்கப்பட்டிருந்தால், பல வேலைகளை எளிதாகச் செய்யலாம். மொபைல் எண்ணில் OTP மூலம் பல ஆதார் தொடர்பான சேவைகளைப் பெறலாம். உங்கள் மொபைல் எண் ஆதாருடன் இணைக்கப்படவில்லை அல்லது எண்ணை மாற்ற விரும்பினால், நீங்கள் இந்த எளிய செயல்முறையைப் பின்பற்றலாம்.
ஆதார் அட்டையுடன் மொபைல் எண்ணை எளிமையாக இணைப்பது எப்படி என்று பார்ப்போம் வாங்க !
ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை மாற்றவோ அல்லது வேறு எண்ணை இணைக்கவோ விரும்பினால், முதலில் UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://uidai.gov.in/ பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
நீங்கள் இங்கே பதிவுசெய்து, ஆதார் சேவா கேந்திராவில் அப்பாயின்மெண்டை வாங்க வேண்டும். உங்கள் வசதிக்கேற்ப இந்த தேதியை நீங்கள் தேர்வு செய்யலாம். கூடுதலாக, நீங்கள் நேரடியாக சேவை மையத்திற்கும் செல்லலாம்.
ஆதார் சேவா கேந்திராவைப் பார்வையிட்ட பிறகு, உங்கள் மொபைல் எண்ணைப் புதுப்பிக்க ஆதார் திருத்தப் படிவத்தை நிரப்ப வேண்டும்.
இந்தப் படிவத்தில் உங்கள் பெயர், ஆதார் எண் மற்றும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட வேண்டிய மொபைல் எண் ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும்.
பின்னர் இந்த படிவத்தை ஆதார் சேவை மையத்தில் உள்ள அலுவலரிடம் கொடுக்கவும்.
பயோமெட்ரிக் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு, உங்கள் புதிய மொபைல் எண் சில மணிநேரங்களில் புதுப்பிக்கப்படும்.
மு.வா.ஜெகதீஸ் குமார்