life sentence for nagarkovil kasi

நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனை!

தமிழகம்

பெண்களை ஆபாசப் படம் எடுத்து மிரட்டிய வழக்கில் கைதான நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனை வழங்கி இன்று (ஜூன் 14) தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பெண் மருத்துவர் உள்ளிட்ட 120-க்கும் அதிகமான பெண்களிடம் பழகி, அவர்களின் ஆபாச புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வேன் எனக் கூறி மிரட்டி பணம் பறித்த வழக்கில் நாகர்கோவில் காசி கடந்த 2020ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

பிற மாநிலத்தை சேர்ந்த சிறுமிகள் மற்றும் இளம் பெண்களுடனும் சமூக வலைத்தளம் வாயிலாகப் பேசி மிரட்டியுள்ளார்.

இவர் மீது போக்சோ, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் வழக்கு விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றும் வழக்கு விசாரணை சிபிஐ போலீசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது.

இதனால் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

சிபிசிஐடி விசாரணையில் காசியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப்பில் இருந்து 400 ஆபாச வீடியோக்கள், 1900 புகைப்படங்கள் இருப்பது தெரியவந்தது. பின்னர் காசி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று நாகர்கோவில் விரைவு நீதிமன்றம் காசிக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள காசிக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.1.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சிபிசிஐடி போலீஸ் வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த போது முன் ஜாமீன் கேட்டு காசி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மோனிஷா

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: நாளைக்கு ஒத்திவைப்பு!

ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி மனு!

+1
0
+1
0
+1
0
+1
7
+1
0
+1
0
+1
0