சிறுத்தை வழக்கு: விசாரணைக்கு எம்.பி. ரவீந்திரநாத் ஆஜர்!

தமிழகம்

சிறுத்தை உயிரிழந்த விவகாரம் தொடர்பாக எம்.பி.ரவீந்திரநாத் இன்று(நவம்பர் 12) தேனி வனத்துறை அதிகாரிகள் முன் ஆஜரானார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ரவீந்திரநாத்துக்கு சொந்தமாக ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன.

கடந்த மாதம் 28 ஆம் தேதி ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டத்தில் கைலாசப்பட்டி என்ற இடத்தில் சோலார் மின்வேலியில் சிறுத்தை ஒன்று சிக்கி உயிரிழந்தது.

இதுதொடர்பாக ரவீந்திரநாத் தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்திருந்த அலெக்ஸ் பாண்டியன் மற்றும் தோட்ட மேலாளர்களான தங்கவேல், ராஜவேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த வனத்துறை அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.

Leopard case MP for investigation Ravindranath appear

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் மின்வேலி அமைத்திருக்கும் எம்.பி.ரவீந்திரநாத் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஏராளமான விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மேலும் ரவீந்திரநாத்தை கைது செய்யக்கோரி தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணக்குமார், திமுக போடி ஒன்றிய செயலாளர் லட்சுமணன் உள்ளிட்டோர் தேனி மாவட்ட வன அலுவலரிடம் புகார் அளித்தனர்.

மின்வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்தது தொடர்பாக எம்.பி.ரவீந்திரநாத்தை விசாரிக்க, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு வனத்துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டது.

Leopard case MP for investigation Ravindranath appear

இதையடுத்து ரவீந்திரநாத்துடன், தியாகராஜன் காளியப்பன் என்ற மேலும் 2 நில உரிமையாளர்களுக்கும் வனத்துறை சம்மன் அனுப்பியது.

சிறுத்தை இறந்தது தொடர்பாக நவம்பம் 1 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ரவீந்திரநாத்துக்கு வனத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.

ஆனால் அன்றைய தினம் டெல்லியில் குடியரசு தலைவர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றதால் ரவீந்திரநாத் எம்.பி ஆஜராகாமல் அவரது வழக்கறிஞர் மூலம் கடிதம் அனுப்பியிருந்தார்.

இதையடுத்து 2 ஆவது முறையாகவும் ரவீந்திரநாத்துக்கு வனத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்படி எம்.பி. ரவீந்திரநாத் தேனியில் உள்ள வனச்சரக அலுவலகத்தில் மாவட்ட உதவி வன பாதுகாவலர் ஷர்மிலி முன்னிலையில் இன்று(நவம்பர் 12) ஆஜராகியுள்ளார்.

கலை.ரா

யார் ஏழைகள்? –ஸ்டாலின் சரமாரிக் கேள்வி!

அரசுக்கு இழப்பு : அமைச்சரை விடுவிக்க மறுப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *