கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்குக் கிழக்கே தென்கிழக்கு திசையில் 700 கிலோ மீட்டர் தொலைவிலும் காரைக்கால் தென்கிழக்கே 690 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது மேற்கு வட மேற்கில் நகர்ந்து புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இதன் காரணமாகக் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரே இடங்களில் கன மழை முதல் மிகக் கனமழை பெய்யும் என்றும் கூறியுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் திருவாரூருக்கு விரைந்துள்ளனர்.
அதுபோன்று திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிசம்பர் 8) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
பிரியா
56 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது சிபிஐ வழக்கு: தமிழகத்தில் எத்தனை?
ஆளுநரைச் சந்தித்த ஆன்லைன் கேம் நிறுவன நிர்வாகிகள்!