late coming officers not to allowed

தாமதமாக வந்த அதிகாரிகள்… மாவட்ட ஆட்சியர் எடுத்த அதிரடி ஆக்சன்!

தமிழகம்

மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு தாமதமாக வந்த அதிகாரிகளை மதுரை மாவட்ட ஆட்சியர் அரங்கிற்கு வெளியே நிற்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களின் குறைகளை களைவதற்காக திங்கள் கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 9.30 மணியளவில் மக்கள் குறைதீர் கூட்டம் தொடங்கியது.

இதில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா கலந்துகொண்ட  நிலையில், ஒரு சில அதிகாரிகளை தவிர்த்து, மாவட்ட வருவாய் அலுவலர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ’மெதுவா போவோம்’ என்ற மனநிலையில் கூட்டத்திற்கு தாமதமாக வந்தனர்.

இதனையடுத்து அந்த லேட் கம்மிங் அதிகாரிகளை கூட்டரங்கிற்கு உள்ளே வர அனுமதி மறுத்த ஆட்சியர் சங்கீதா, அவர்களை வெளியே நிற்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அதிகாரிகள் தாமதமாக வருவது வழக்கமான நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து 2 மணி நேரத்திற்கும் மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் கூட்டரங்கிற்கு வெளியே நிற்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

3வது கட்ட நடைபயணம்: மத்திய அமைச்சருடன் சென்ற அண்ணாமலை

இஸ்ரோவுக்கு தொடர் ஆதரவு… நன்றி தெரிவித்த சோம்நாத்

+1
0
+1
2
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *