டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (ஆகஸ்டு 22) நிறைவடைகிறது என டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 92 பதவிகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 92 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டது.
அதாவது, துணை ஆட்சியர் பதவியில் காலியாக உள்ள 18 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர்- 26, வணிகவரித்துறை உதவி ஆணையர்- 25, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 13, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்- 7, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி – 3 என குரூப் 1 பதவியில் அடங்கிய 92 காலி பணியிடங்கள் அதில் அடங்கும்.
தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது முதல் ஏராளமான பட்டதாரிகள் போட்டி போட்டு கொண்டு விண்ணப்பித்து வந்தனர்.
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று இரவு 11:59 மணியுடன் நிறைவடைகிறது.
விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான http://tnpsc.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் ஆகஸ்ட் 27 முதல் 29-ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 30ந் தேதி குரூப் 1 முதல் நிலைத் தேர்வு நடைபெறும் என்றும், முதன்மை தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
வேலைவாய்ப்பு : ரூ.1,38,500 ஊதியத்தில் பணி… டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!