ஒவ்வொரு நிதியாண்டும் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருவதால், வருமான வரி செலுத்துவோருக்கு மார்ச் 31 ஆம் தேதி என்பது மிக முக்கியமான நாளாக உள்ளது.
எனவே, வரி செலுத்துவோர் அனைவரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் செய்துமுடிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்களை பற்றி பார்க்கலாம்.
பான் – ஆதார் இணைப்பு
ஆதார் கார்ட் மற்றும் பான் கார்டுகளை இணைப்பதற்கான கடைசி நாள் மார்ச் 31 ஆம் தேதி என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசி நாளுக்குள் ஆதார் – பான் இணைக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். எனவே மார்ச் 31-ம் தேதிக்குள் பான் கார்டு எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயம்.
வருமான வரித் தாக்கல்
2021-22 ஆம் நிதியாண்டுக்கான தாமத ரிட்டன்களை (Belated Returns) மார்ச் 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம். தவறினால் இதற்கு 1000 முதல் 5000 ரூபாய் அபராதமும் சேர்த்து வசூலிக்கப்படும்.
ஈ-வெரிஃபிகேஷன்
வருமான வரி ரிட்டன்களை ஆன்லைனில் வெரிஃபை (E-Verification) செய்ய வேண்டும்.
அட்வான்ஸ் வரி
அட்வான்ஸ் வரி செலுத்துவதற்கான கடைசி நாள் மார்ச் 15 ஆம் தேதி. எனவே ஒருவர் செலுத்த வேண்டிய வருமான வரியை நாளைக்குள் செலுத்த வேண்டும்.
வரி சேமிப்பு முதலீடு
வரி சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கான கடைசி நாள் மார்ச் 31. எனவே, வருமான வரியை சேமிக்க விரும்புவோர் உடனடியாக முதலீடு செய்ய வேண்டும்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்!
மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு அனிதா பெயர்: முதல்வர் அறிவிப்பு!