பத்திரப்பதிவு அலுவலகங்கள் இன்றும் செயல்படும்!

Published On:

| By christopher

land registration offices open

தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இன்று (பிப்ரவரி 2) செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பதிவுத்துறை வெளியிட்ட அறிக்கையில்; 2024-25 ம் நிதியாண்டில் கடந்த 05.12.2024 அன்று ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.238.15 கோடி வருவாய் பதிவுத்துறையில் ஈட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கடந்த 31.1.2025 அன்று 23,061 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, இதே நிதியாண்டில் இண்டாவது முறையாக அரசுக்கு ரூ.231.51 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு நாள் வருவாய் வசூலில் இரண்டாவது முறையாக இதே நிதியாண்டில் அதிக வசூல் செய்து புதிய மைல்கல்லை பதிவுத்துறை எட்டியுள்ளது.

மேலும், பொதுமக்களின் நலன் கருதி அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவதால் பொது விடுமுறை நாளான 02.02.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள அரசு வணிகவரி மற்றும் பதிவுத்துறை கடித (நிலை) எண்.124/ஜே2/2024 நாள் 21.10.2024ன் வழியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்களை காலை 10.00 மணி முதல் ஆவணப்பதிவு முடியும் வரை செயல்பாட்டில் வைத்திட அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிடும் விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப்பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப்பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மேற்படி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் பணிசெய்யும் பதிவுத்துறை பணியாளர்களுக்கு மாற்று விடுப்பு வழங்கப்படும் என அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மங்களகரமான நாளான 03.02.2025 அன்று அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. land registration offices open

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share