கடலூர் மாவட்டம் திருப்பாதிப்புலியூரில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மனைவி பெயரில் இருசக்கர வாகன விற்பனை நிலையம் இயங்கி வருகிறது.
இந்த ஷோரூமில் நேற்று இரவு திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. கடையின் பின்புறம் உள்ள கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்நுழைந்துள்ளனர்.
அங்கு இரண்டு லாக்கர்களில் இருந்த ரூ.3.50 லட்சம் பணம் மற்றும் வாடிக்கையளார்களுக்கு வழங்க இருந்த 6 கிராம் தங்க நாணயம் ஆகியவை திருடப்பட்டுள்ளன.
இதுகுறித்து இன்று காலை தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பாதிரிபுலியூர் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, போலீசாருக்கு சில திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதன்படி கடைக்குள் ஒருவர் மட்டுமே நுழைந்து பணம் மற்றும் தங்க நாணயங்களை திருடியுள்ளார். மேலும் திருடியவர் வடநாட்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குற்றவாளியை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வரிச்சியூர் செல்வம் ஜாமீன் மனு: நீதிமன்றம் உத்தரவு!
லால் சலாம் படத்தை ரிலீஸ் செய்யும் ரெட் ஜெயண்ட்!