நேரமின்மை, வேலைப்பளு என எதையெல்லாமோ காரணம்காட்டி, வீட்டில் சமைப்பதையே தவிர்க்கிறவர்களும் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். தினமும் ஒருவேளை உணவாவது பாரம்பர்யமானதாக இருக்கும்படி பார்த்துக்கொண்டால் நம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கலாம். கூடவே அழிந்துகொண்டிருக்கும் பாரம்பர்யச் சுவையையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்லலாம். அப்படி சத்தான, பாரம்பர்யமான, சுவையான உணவே இந்த குதிரைவாலி அரிசி உப்புமா. குதிரைவாலி அரிசியில் நார்ச்சத்தும் இரும்புச்சத்தும் அதிக அளவு உள்ளதால் அனைவருக்கும் ஏற்றதாக அமையும்.
என்ன தேவை?
குதிரைவாலி அரிசி ரவை – ஒரு கப்
புழுங்கலரிசி அரிசி ரவை – ஒரு கப்
மிளகு, கடுகு – தலா ஒரு டீஸ்பூன்
துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
தண்ணீர் – 5 கப்
தேங்காய்த் துருவல் – ஒரு கப்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
தோல் சீவி, பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
அடிகனமான கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, துவரம்பருப்பு, கறிவேப்பிலை, மிளகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்துக் கிளறவும். அதனுடன் தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். பிறகு அரிசி ரவை, குதிரைவாலி ரவை சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, கிளறி, மூடி போட்டு 10 – 15 நிமிடங்கள் வேகவிடவும் (நடுநடுவே மூடியைத் திறந்து கிளறிவிடவும்). தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கவும். கத்திரிக்காய் அல்லது தக்காளி கொத்சுடன் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புத்தாண்டில் பைக் ரேஸ்: 242 பைக்குகள் பறிமுதல்!