தற்போதைய சூழ்நிலையில் சாதாரணமானவர்களையே சத்தான உணவுகளை அதிகம் உட்கொள்ளச் சொல்கிற மருத்துவர்கள், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் அதிக அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
பருவ மாற்றத்துக்கேற்ப நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்திக்கொள்ள இந்த குதிரைவாலி – பாசிப்பருப்புக் கஞ்சி குடும்பத்தினர் அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும்.
என்ன தேவை?
குதிரைவாலி – ஒரு கப்
பாசிப்பருப்பு – அரை கப்
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – ஒன்று (தாளிக்க)
கறிவேப்பிலை – இரண்டு ஈர்க்கு
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப
மிளகு – ஒரு டீஸ்பூன் (பொடித்தது)
பெருங்காயம் – சிறிதளவு
எப்படிச் செய்வது?
பாசிப்பருப்பு, பெருங்காயம் சேர்த்துத் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். வேகும்போது, குதிரைவாலி அரிசியைச் சேர்த்துக் குழைய வேகவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்துக் கஞ்சியில் ஊற்றவும். ஊறுகாய் மற்றும் துவையலுடன் பரிமாறவும்.
பசி நேரத்துக்கு ஏற்ற சிறந்த கஞ்சி இது. காரத்துக்குக் காய்ந்த மிளகாயைத் தவிர்த்துவிட்டு, மிளகு ஒன்றிரண்டாகப் பொடித்துச் சேர்த்துக் கொள்ளலாம்.
கம்பு – பீர்க்கங்காய்த் துவையல்
கிச்சன் கீர்த்தனா: சோளக் கஞ்சி!