நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ள இந்த குதிரைவாலி பொங்கல் காலை உணவுக்கு ஏற்ற சத்தான சிற்றுண்டி. தாது உப்புகள், வைட்டமின் பி, புரதம் அதிமுள்ள இந்த பொங்கல், வயிறு நிறையும் உணவாகவும் இருக்கும். மேலும், இது உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கும். செரிமானமாவதும் எளிது.
என்ன தேவை?
குதிரைவாலி அரிசி – அரை கப்
பாசிப் பருப்பு – கால் கப்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பெருங்காயம் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
நெய் – ஒரு டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
பருப்பு, குதிரைவாலி அரிசி இரண்டையும் கழுவி, 2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரில் வேகவைக்கவும். பிறகு, கடாயில் எண்ணெய், நெய்யைக் காயவிட்டு, மிளகு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்து (அடுப்பை `சிம்’மில்வைத்துத் தாளிக்கவும்) அரிசி, பருப்பில் கொட்டி, உப்பு போட்டுக் கிளறிவிட்டு, குக்கரை மூடி வைத்து வெயிட் போட்டு, இரண்டு விசில் வந்தபிறகு, `சிம்’மில் ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்கி பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: பனீர் புலாவ்
கிச்சன் கீர்த்தனா: பிரெட் பனீர் ரோல்