உயரும் பலி எண்ணிக்கை: பட்டாசு ஆலை உரிமையாளர் கைது!

Published On:

| By christopher

குருவிமலை பட்டாசு ஆலை விபத்தினைத் தொடர்ந்து அதன் உரிமையாளர்களுள் ஒருவரான அதிமுக பிரமுகர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் அருகே உள்ள குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று(மார்ச் 22) திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் 5 பேரும், மருத்துவமனையில் 4 பேரும் என இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் படுகாயம் அடைந்த 7 பெண்கள் உட்பட 15 தொழிலாளர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையிலும், 4 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், வெடிவிபத்து தொடர்பாக பட்டாசு ஆலையின் உரிமையாளர்களுள் ஒருவரான நரேந்திரனை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளாக பட்டாசு ஆலை நடத்தி வரும் நரேந்திரன் அதிமுகவைச் சேர்ந்த பிரமுகர் ஆவார்.

அதே வேளையில், பட்டாசு ஆலையின் மற்றொரு உரிமையாளர் சுதர்சன் (31) வெடி விபத்தில் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

வேளாண் பட்ஜெட் : அரசுக்கு ’ஐடியா’ சொன்ன கார்த்தி

டாஸ்மாக் டார்கெட்… அச்சீவ் செய்ய இதோ ஆலோசனைகள்!