Krishnagiri sexual harassment : Sivaraman's father also died!

கிருஷ்ணகிரி பாலியல் சம்பவம் : உயிரிழந்த சிவராமனின் தந்தையும் மரணம்!

தமிழகம்

போக்சோ வழக்கில் கைதான சிவராமன் சிகிச்சை பலனின்றி இன்று (ஆகஸ்ட் 23) காலை உயிரிழந்த நிலையில், அவரது தந்தையும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

கிருஷ்ணகிரி பர்கூரில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த போலி என்சிசி முகாமில் மாணவி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதால் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

கைதுக்கு பயந்து அதற்கு முன்னதாக அவர் எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. அதனையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதற்கிடையே சிவராமன் கைதால் மன உளைச்சலில் இருந்த அவரது தந்தை அசோக்குமாரும் (வயது 61) இன்று உயிரிழந்துள்ளார்.

காவேரிப்பட்டணம் பகுதியில் குடிபோதையில் பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கிய அசோக் குமார் தலையில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்துள்ளார்.

தொடர்ந்து, இருவரின் உடல்களையும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  ஒரே நேரத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

விசா இன்றி இலங்கைக்குச் சுற்றுலா செல்லலாம்!

அரசு ஊழியர்களாக்க வேண்டும் : அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *