சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் இன்று(செப்டம்பர் 27) பதவியேற்றார்.
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.மகாதேவன் சில தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த கே.ஆர்.ஸ்ரீராமைச் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்குமாறு உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரையை ஏற்று கே.ஆர்.ஸ்ரீராமைச் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கே.ஆர்.ஸ்ரீராமுக்கு இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்பு விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதிமுகவில் இருந்து ஜெயக்குமார் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
சென்னை தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுள்ள கே.ஆர்.ஸ்ரீராமின் முழுப்பெயர் கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராம் ஆகும். அவர் மும்பை பல்கலைக்கழத்திலும், லண்டனிலும் சட்டம் பயின்றார்.
பின்னர் 1986 முதல் வழக்கறிஞராக பணியாற்றி வந்தவர், 2013 ஆண்டு மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தான் அவர் தற்போது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ரூ.57 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை!
மெய்யழகன் முதல் கொட்டுக்காளி வரை… தியேட்டர் மற்றும் ஓடிடி ரிலீஸ்!
அமலாக்கத்துறை அலுவலகத்துக்குச் செல்லும் செந்தில் பாலாஜி