இஞ்சி விலை உயர்வு : மற்ற காய்கறிகளின் விலை பட்டியல்!

தமிழகம்

தொடர் மழை காரணமாக கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இஞ்சி விலை அதிகரித்துள்ளது. வரத்து குறைவு காரணமாக, ஒரு மூட்டை இஞ்சி ரூ.4,500 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, காய்கறிகள் வரத்தும் குறைந்தது. பச்சை மிளகாய், கேரட், இஞ்சி, எலுமிச்சை விலை அதிகரித்துள்ளது.

alt="koyambedu market vegetables price list today"

இன்று, 1 கிலோ கேரட், ரூ.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 1 கிலோ கேரட் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.  1 கிலோ பீன்ஸ் நேற்றைய விலையான, ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பச்சை மிளகாய் 1 கிலோ ரூ.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 1 கிலோ பச்சை மிளகாய் ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டது. இஞ்சி 1 கிலோ ரூ.65-க்கு விற்பனை செய்யபடுகிறது.

தொடர் மழை காரணமாக, இஞ்சி விலை அதிகரித்துள்ளதாகவும், ஒரு மூட்டை இஞ்சியின் விலை ரூ.4,500-க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்

வெங்காயம் ரூ.24, ரூ.20,ரூ.16 (தரத்துக்கு ஏற்ப விலை மாறுபடுகிறது)

நவீன் தக்காளி ரூ.25

நாட்டு தக்காளி ரூ.15, ரூ.13

உருளை  ரூ.39, ரூ.35, ரூ.26

சின்ன வெங்காயம் ரூ.40, ரூ.34 ரூ.30

ஊட்டி கேரட் ரூ.65, ரூ.60, ரூ.50

பீன்ஸ் ரூ.90, ரூ.80, ரூ.75

பீட்ரூட். ஊட்டி ரூ.45.40

கர்நாடக பீட்ரூட் ரூ.25, ரூ.23

சவ் சவ் ரூ.25, ரூ.20

முள்ளங்கி ரூ.20, ரூ.18

முட்டை கோஸ் ரூ.20, ரூ.15

வெண்டைக்காய் ரூ.20, ரூ.10

உஜாலா கத்திரிக்காய் ரூ.25. ரூ.20

வரி கத்திரி  ரூ.20, ரூ.22

காராமணி ரூ.35

பாவக்காய் ரூ.25, ரூ.20

புடலங்காய் ரூ.20, ரூ.15

சுரக்காய் ரூ.30,

சேனைக்கிழங்கு ரூ.28, ரூ.25

முருங்கைக்காய் ரூ.30, ரூ.25

சேமகிழங்கு ரூ.36, ரூ.30

காலிபிளவர் ரூ.25, ரூ.20

வெள்ளரிக்காய் ரூ.20, ரூ.15

பச்சை மிளகாய் ரூ.45, ரூ.35

பட்டாணி ரூ.180, ரூ.160

இஞ்சி ரூ.65 ரூ.55

பூண்டு ரூ.100

அவரைக்காய் ரூ.65, ரூ.60

மஞ்சள் பூசணி ரூ.10

வெள்ளை பூசணி.ரூ.10

பீர்க்கங்காய் ரூ.35, ரூ.30

எலுமிச்சை ரூ.85, ரூ.80

நூக்கல் ரூ.35, ரூ.28

கோவைக்காய் ரூ.22, ரூ.20

கொத்தவரங்காய் ரூ.30

வாழைக்காய் ரூ.13, ரூ.10

வாழைத்தண்டு, ரூ.30,ரூ.28

வாழைப்பூ ரூ..20, ரூ.18

பச்சைகுடமிளகாய் ரூ. 65, ரூ.40

மஞ்சள் சிகப்பு, குடமிளகாய் ரூ.80, ரூ.60

கொத்தமல்லி ரூ.7

செல்வம்

ஜெய்பீம் குறித்து புகாரளிக்க வந்தவர் தடுத்து நிறுத்தம்: ஏன்?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *