கோவை கார் சிலிண்டர் விபத்து நடந்தபோது அங்குள்ள கோவிலின் பக்கவாட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் காரில் இருந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறும் காட்சி பதிவாகியுள்ளது.
கோவை உக்கடம் அருகே நேற்று (அக்டோபர் 23) அதிகாலை காரில் எடுத்து சென்ற 2 சிலிண்டர்களில் ஒரு சிலிண்டா் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இதில் அந்த காரில் வந்த நபர் உயிரிழந்தாா்.
தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் சமயத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் போலீசாா் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
மேலும் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்துள்ளது.
அதில், கார் வெடித்து உயிரிழந்த நபர் உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் கார் சிலிண்டர் வெடித்த விபத்து தொடர்பாக அந்த பகுதியில் இருந்த பல்வேறு சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளன.
அதன்படி, உக்கடத்தில் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக நடைபெற்ற இந்த கார் விபத்து, கோவிலின் பக்கவாட்டில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
அந்த வீடியோவில், கார் வெடிக்கும் போது அதிலிருந்து பொருட்கள் மிக வேகமாக சிதறுவது பதிவாகியுள்ளது. மேலும் கார் வெடித்த பிறகு மக்கள் அந்த இடத்தை நோக்கி ஓடி வருவதும் பதிவாகியுள்ளது
இதற்கிடையே கார் வெடித்து சிதறிக்கிடந்த பகுதியில் ஆங்காங்கே, ஆணிகள், கோலிகுண்டுகள், இரும்பு பால்ரஸ் குண்டுகள் ஆகியவை சிதறிக்கிடந்தது. எனவே காரில் இருந்தது வெடிபொருட்கள் தானா என்று தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வினோத் அருளப்பன்
கோவை கார் வெடித்து சிதறும் பர பர சிசிடிவி காட்சி!
தீபாவளி மது விற்பனை கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?