கிச்சன் கீர்த்தனா: கொங்குநாட்டு உருளைக்கிழங்கு வறுவல்!

தமிழகம்

சிறிதளவு எடுத்து வாயில் போட்ட உடனேயே, ‘ஆஹா.. அற்புத சுவை’ என்று நாக்கு தெரிவிக்க… ‘கொண்டு வா… கொண்டு வா’ வயிற்றை கெஞ்ச வைக்கும் விதத்திலான ருசிமிக்க உணவு வகைகள், கொங்கு நாட்டு சமையல் உலகில் ஏராளம். அவற்றில் ஒன்று எளிமையாகச் செய்யக்கூடிய இந்த கொங்குநாட்டு உருளைக்கிழங்கு வறுவல்.

என்ன தேவை?

சின்ன உருளைக்கிழங்கு – 100 கிராம்

இஞ்சி-பூண்டு விழுது – 50 கிராம்

மிளகாய்த்தூள் – 5 கிராம்

எலுமிச்சை – 1

கறிவேப்பிலை – சிறிதளவு

சோம்பு – 5 கிராம்

கரம்மசாலாத்தூள் – 10 கிராம்

சீரகம் – 5 கிராம்

எண்ணெய் – 20 மில்லி

உளுந்து – 5 கிராம்

கடுகு – 5 கிராம்

பூண்டு – 3 பல் (நன்றாக இடித்துக்கொள்ளவும்)

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை வேகவைத்து உரித்துக்கொள்ளவும். 3 கிராம் சோம்பு, 3 கிராம் சீரகம், கரம் மசாலாத்தூளை எடுத்து நன்றாக வறுத்து, இஞ்சி – பூண்டு விழுதுடன், எலுமிச்சைச்சாறு, கறிவேப்பிலை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

இத்துடன் வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்துக் கிளறவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெயைச் சூடாக்கி உருளைக்கிழங்கைப் போட்டு அரைவேக்காடாகப் பொரித்து எடுக்கவும்.

பின், மீதம் இருக்கும் சீரகம், சோம்பு, உளுந்து, கடுகு, இடித்த பூண்டு போட்டு நன்றாக வதக்கி, பொரித்த உருளைக்கிழங்கை இதில் சேர்க்கவும்.

புரொக்கோலி ஃபிரிட்டர்ஸ்!

கறிவேப்பிலை மீன்

+1
1
+1
2
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *