தீபாவளி என்றாலே நம் மனதிற்கு நினைவில் வருவது புத்தாடைகளும் பட்டாசும் தான். இந்த நாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். kolukkuppatti village crackers free Diwali
இப்படி தீபாவளியும் பட்டாசும் பிரிக்க முடியாத ஒன்றாக இருந்து வரும் நிலையில் பறவைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை தடுக்க சிவங்கை மாவட்டத்தில் உள்ள கொள்ளுக்குடிப்பட்டி கிராம மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு வெடிக்காமல் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கொள்ளுக்குடிப்பட்டி கிராமத்தில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் உள்ளது.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலங்களில் சுவிட்சர்லாந்து, ரஷ்யா, இந்தோனேஷியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து பறவைகள் வருவது வழக்கம்.
இந்த ஆண்டு குளிர்கால சீசனில் பறவைகள் வரத்தொடங்கி விட்டன. பறவைகளை காண்பதற்காக சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகளவில் மக்கள் பறவைகள் சரணாலயத்திற்கு வருகை தருவார்கள்.
வேட்டங்குடி பறவைகள் சரணாலயமானது பறவைகள் இனப்பெருக்கத்திற்கு பாதுகாப்பான இடமாக உள்ளது. மேலும் இந்த பறவைகள் சரணாலயத்தில் 200-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றன.
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சத்தங்கள் பறவைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் கொள்ளுக்குடிப்பட்டி கிராமத்தில் உள்ள மக்கள் பட்டாசு வெடிக்காமல் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
இதுகுறித்து கொள்ளுக்குடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “பத்து வயதாக இருக்கும் போது இந்த ஊரில் பறவைகள் அதிகளவில் வரத்தொடங்கியது.
அதிலிருந்து நாங்கள் பறவைகளை பாதுகாப்பாக கவனித்து வருகிறோம். பறவைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் தீபாவளி பண்டிகையின் போது நாங்கள் பட்டாசு வெடிக்க மாட்டோம்.
குழந்தைகள் பட்டாசு வெடிக்க ஆர்வம் காட்டினாலும் அவர்களிடம் பறவைகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை எடுத்துரைப்போம்” என்று தெரிவித்தார்.
அதே ஊரைச் சேர்ந்த மகேஷ்வரி கூறும்போது, “நான் இந்த ஊருக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிறது. பறவைகளின் பாதுகாப்பிற்காக நாங்கள் பட்டாசு வெடிப்பதில்லை.
இந்த ஆண்டு மழைப்பொழிவு குறைவாக உள்ளதால் பறவைகள் வரத்தும் குறைந்துள்ளது. இதனால் பறவைகள் சரணாலயத்திற்கு வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். kolukkuppatti village crackers free Diwali
மேலும் இங்கு வரும் மக்களுக்கு வனத்துறை சார்பில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
தொகுதி மாறுகிறேனா? திருமா பதில்!
அர்ச்சகர் நியமனம்: மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!
நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு போனஸ் எவ்வளவு?
இரண்டரை வருட ஆதிக்கம்… பாபர் அசாமை வீழ்த்தி சுப்மன் கில் முதலிடம்!