நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் ட்விட்டர் கணக்கு நேற்று (நவம்பர் 25) இரவு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. பின்னர் அது சரிசெய்யப்பட்டது. கடந்த வாரம் நடிகர் கார்த்தி முகநூல் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. அவரது முகநூல் பக்கத்தில் ஹேக்கர்கள் கேம் விளையாடும் வீடியோ காட்சிகள் பதிவிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில், அமைச்சர் கே.என் நேருவின் ட்விட்டர் கணக்கு நேற்று இரவு முதல் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
அவரது ட்விட்டர் பக்கத்தில், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவின் பக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், விண்வெளி தொடர்பான ட்விட்டர் பதிவுகள் கே.என்.நேரு ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் டி.ஆர்.பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேருவின் ட்விட்டர் கணக்கு நேற்று இரவு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் ட்விட்டர் இந்தியா நிறுவனத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அனைவரும் சமூக வலைதளங்களில் தங்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்