பலதரப்பட்ட பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை சேர்த்து சாலட்டாகச் சாப்பிடுவதால் எல்லாவிதமான ஊட்டச்சத்துகளையும் பெற முடியும். இது உடலுக்குத் தேவையான ஆற்றலையும் அளிக்கும். பழங்கள், காய்கறிகள் மட்டுமல்லாமல் ஸ்வீட் கார்ன், முளைப்பயறு சேர்த்தும் சாலட் செய்து சுவைக்கலாம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இந்த சாலட் பெரிதும் உதவும்.
என்ன தேவை?
ஸ்வீட் கார்ன் – 50 கிராம் (வேகவைக்காதது)
முளைக்கட்டிய பச்சைப்பயறு – 100 கிராம்
துருவிய கேரட் – 2 டேபிள்ஸ்பூன்
துருவிய வெள்ளரி – 2 டேபிள்ஸ்பூன்
பெங்களூர் தக்காளி – ஒன்றில் பாதி (பொடியாய் நறுக்கியது)
பெரிய வெங்காயம் – ஒன்றில் பாதி (பொடியாக நறுக்கியது)
சீரகம் – அரை டீஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
புரொக்கோலி – 30 கிராம்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
புரொக்கோலி மற்றும் ஸ்வீட் கார்னை தனியே வேகவைத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து, சீரகம், நறுக்கிய பெரிய வெங்காயம், மிளகுத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் துருவிய கேரட் மற்றும் வெள்ளரியைச் சேர்க்கவும். இவற்றுடன் வேகவைத்த புரொக்கோலி மற்றும் ஸ்வீட்கார்னையும் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் முளைக்கட்டிய பச்சைப்பயறைச் சேர்த்துப் புரட்டி இறக்கிப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : மரவள்ளிக்கிழங்கு மசால் வடை
கிச்சன் கீர்த்தனா : புளிக் கத்திரிக்காய்
நடிகர் விஜய்யை தெரியும்… முதல்வர் ஸ்டாலினை தெரியாது!- சென்னையில் மனுபாக்கர் ஓபன் டாக்!