கிச்சன் கீர்த்தனா: ஃபராலி பாட்டீஸ்!

Published On:

| By Kavi

மகத்தான மக்கள் உணவுகள் என்ற பெருமையைப் பெற்றுள்ள உணவுகளில் ஒன்று, இந்த  ஃபராலி பாட்டீஸ். மும்பைவாசிகளின் விருப்ப  ஸ்ட்ரீட் ஃபுட் உணவான இதை விடுமுறை நாளான இன்று, வீட்டிலேயே செய்து சுவைக்க இந்த ரெசிப்பி உதவும்.

என்ன தேவை?
மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு – 6 (வேகவைத்து மசிக்கவும்)
ஆரோரூட் மாவு – 4 டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு  – தேவையான அளவு

பூரணம் செய்ய
தேங்காய்த் துருவல் –  அரை கப்
கொரகொரப்பாகப் பொடித்த வறுத்த வேர்க்கடலை – கால் கப்
கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு
உலர்திராட்சை – ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
அலங்கரிக்க…
கிரீன் சட்னி – தேவையான அளவு
கெட்டித் தயிர் – அரை கப்
சர்க்கரை – 4 டேபிள்ஸ்பூன்

எப்படிச் செய்வது?
பூரணம் செய்யக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும். உருளைக்கிழங்குடன் ஆரோரூட் மாவு, உப்பு சேர்த்துப் பிசையவும். பிசைந்த மாவைச் சிறிய உருண்டைகளாக்கி உள்ளங்கையில் வைத்து நடுவே குழி செய்து பூரணத்தை வைத்து மூடி, உருண்டைகளாக உருட்டவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காயவைத்து உருண்டைகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். தயிருடன் சர்க்கரை சேர்த்து நன்கு அடிக்கவும். உருண்டைகள்மீது கிரீன் சட்னி, தயிர்க் கலவை ஊற்றிப் பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நல்லவேளை தப்பிச்சிட்டேன்… அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share