தைப்பொங்கல் கொண்டாடப்படும் இந்தத் திருநாளில் வீட்டிலுள்ளவர்களுக்கு வித்தியாசமாக செய்து கொடுக்க இந்த தால் வடா உதவும். இதை நைவேத்தியமாகவும் படைத்து மகிழலாம். வடைக்குப் பதிலாக உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.
என்ன தேவை?
பாசிப்பருப்பு – ஒரு கப்
பச்சை மிளகாய் – 4
தோல் சீவிய இஞ்சி – அரை இன்ச் துண்டு
மல்லி (தனியா) – ஒரு டீஸ்பூன்
மிளகு – ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்துத் தண்ணீரை வடியவிடவும். அதனுடன் மல்லி, மிளகு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். பிறகு, உப்பு சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு மாவைச் சிறிய உருண்டைகளாகக் கிள்ளி போட்டுப் பொரித்தெடுக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…