கிச்சன் கீர்த்தனா: கிரிஸ்பி ஸ்பிரிங் ரோல்

தமிழகம்

வெயில் காரணமாக கொஞ்சம் நீட்டிக்கப்பட்ட சம்மர் ஹாலிடேஸும் முடிந்து விட்டது. குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். பள்ளியில் வரும் குழந்தைகளுக்கு என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கும் அம்மாக்கள் சுவையான, சத்தான இந்த கிரிஸ்பி ஸ்பிரிங் ரோல் செய்து கொடுத்து அசத்தலாம்.

என்ன தேவை?
மைதா – 200 கிராம்
அரிசி மாவு – 50 கிராம்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
மைதா பேஸ்ட் – ஒரு டேபிள்ஸ்பூன் (சிறிதளவு தண்ணீரில் கரைத்த மைதா மாவு)

எப்படிச் செய்வது?
மைதா, அரிசி மாவு மற்றும் உப்பை ஒன்றாகச் சேர்த்துப் பிசிறிக்கொள்ளவும். இத்துடன் போதுமான அளவு தண்ணீர், சிறிதளவு எண்ணெய் சேர்த்து, மிருதுவாக மாவைப் பிசைந்து கொள்ளவும். பிறகு சிறு சிறு உருண்டைகளாக்கி, சப்பாத்தி போல மிருதுவாக தேய்த்துக் கொள்ளவும்.

ஸ்பிரிங் ரோல் ஸ்டஃபிங் செய்ய…
கேரட் – 2
முட்டைக்கோஸ் – 50 கிராம்
ஸ்பிரிங் ஆனியன் – 5
குடமிளகாய் – ஒன்று
பெரிய வெங்காயம் – 50 கிராம்
துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?
வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும் மெல்லிய நீளமாக நறுக்கிய கேரட், முட்டைகோஸ், ஸ்பிரிங் ஆனியன், பெரிய வெங்காயம் மற்றும் குடமிளகாயை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும். இத்துடன் துருவிய இஞ்சியைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவும். காய்கறிகள் வெந்து தண்ணீர் வற்றியதும், அடுப்பை அணைக்கவும்.

இனி, தேய்த்த சப்பாத்தியின் நடுவே நீளமாக ஒரு டேபிள்ஸ்பூன் ஸ்டஃபிங்கை வைத்து உருட்டி. மூடும் போது, சப்பாத்தியின் ஓரத்தில் மைதாவை கைகளால் தொட்டு தடவி  ஒட்டினால், சப்பாத்தி பிரிந்து வராது. இனி, வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் தயார் செய்த சப்பாத்தி ரோலை எண்ணெயில் சேர்த்து பொரித்தெடுக்கவும். பிறகு விருப்பத்துக்கேற்ற மாதிரி துண்டுகளாக்கி சாஸுடன் பரிமாறவும்.

உக்ரைனில் மேலும் ஓர் அணை குண்டு வீசி தகர்ப்பு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *