65 என்றால் முதலில் நினைவுக்கு வருவது ‘சிக்கன் 65’ ஆக தான் இருக்கும். அந்த 65-யை சத்தான பேபி கார்னிலும் செய்து ருசிக்க இந்த ரெசிப்பி உதவும். அனைவருக்கும் ஏற்றதாகவும் அமையும்.
என்ன தேவை?
பேபி கார்ன் – 10
மைதா மாவு – 4 டேபிள்ஸ்பூன்
சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
எலுமிச்சைப்பழம் – அரை மூடி
சோம்புத்தூள் – அரை டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப
தாளிக்க:
கறிவேப்பிலை (அலசி ஆய்ந்தது) – 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – ஒன்று (நீளவாக்கில் கீறவும்)
எப்படிச் செய்வது?
வாய் அகன்ற பாத்திரத்தில் மைதா, சோள மாவு, உப்பு, இஞ்சி – பூண்டு விழுது, இரு வகை மிளகாய்த்தூள்கள், சோம்புத்தூள் சேர்த்து எலுமிச்சைச்சாறு பிழிந்து தண்ணீர்விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். பேபி கார்னை மாவில் முக்கியெடுத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சாப்பிடும் தட்டுக்கு மாற்றவும். சிறிய வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளித்து பொரித்துவைத்துள்ள பஜ்ஜியின் மேல் போட்டு நறுக்கிய வெங்காயம் தூவிப் பரிமாறவும். சுவையான கார்ன் சில்லி 65 ரெடி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தக்காளி சாஸ் ரசம் : அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: விக்கிரவாண்டி… பானையை வைத்து ’கேம்’ ஆடிய பாமக- ஷாக்கில் திமுக.,விசிக