தினமும் ஒரே மாதிரியான அரிசி இட்லியை சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்கு, வித்தியாசமான இந்த கோதுமை இட்லி செய்து கொடுத்து அசத்தலாம். இது, நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற மிகச் சிறந்த உணவாகும். இவற்றுடன் காய்கறிகளை மிகவும் சிறியதாக வெட்டிக் கலந்தால் காய்கறி இட்லி தயார்.
என்ன தேவை?
கோதுமை – 300 கிராம் (தோலை குத்தி எடுக்கவும்),
உளுத்தம்பருப்பு – 75 கிராம்
எப்படிச் செய்வது?
கோதுமையை ஒரு மணி நேரம் ஊற வைத்து நன்றாக அரைக்க வேண்டும். உளுத்தம் மாவையும் நன்றாக வெண்ணெய் போல் அரைத்து, உப்புச் சேர்த்துப் பிசைந்து வைக்கவும். எட்டு மணி நேரம் வைத்திருந்து இட்லி அல்லது தோசை செய்யலாம். இதேபோல தீட்டிய கம்பு, கேழ்வரகு போன்றவற்றிலும் மாவு அரைத்து இட்லி, தோசை தயாரிக்கலாம். இவை மிருதுவாகவும், மிகுந்த சுவையுடனும் இருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அருந்ததியர் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா: ஆ.ராசா கோரிக்கை!
ஸ்டாலின் – திருமா… தனியாக நடந்த சந்திப்பில் நடந்தது இதுதான்!