அக்னி நட்சத்திரம் முடிந்தும் அனல் விட்டபாடாக இல்லை. மூன்று வேளைகளுக்கும் கூலாக சாப்பிடுவதையே வயிறும் மனமும் விரும்புகிறது. அந்த வகையில் இந்த வார முதல் நாளை கூலாக கொண்டாட இந்த வாட்டர்மெலன் சப்ஜா ஜூஸ் உதவும்.
என்ன தேவை?
வாட்டர்மெலன் (தர்பூசணி) – ஒரு கப் (விதை நீக்கி நறுக்கியது)
சப்ஜா விதைகள் – ஒரு டீஸ்பூன்
சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை
எப்படிச் செய்வது?
சப்ஜா விதைகள் முழுகும் அளவு தண்ணீர் ஊற்றி ஊறவிடவும். 10 நிமிடங்களில் உப்பி இருக்கும். மிக்ஸியில் தர்பூசணியை ஜூஸ் செய்து அதில் சப்ஜா விதைகளை ஊறவைத்த தண்ணீரோடு சேர்த்துக் கலந்து, சர்க்கரை, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.
என்னென்ன சொல்றாங்க பாருங்க… அப்டேட் குமாரு
நடிகராக என்ட்ரி கொடுத்த விஜய்சேதுபதி மகன்: ‘பீனிக்ஸ் வீழான்’ டீசர் எப்படி?