எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவான இந்த வெஜிடபிள் இட்லி, உடலுக்குத் தேவையான எனர்ஜியை நாள் முழுக்க தரும். காய்கறிகளில் நிறைந்துள்ள வைட்டமின் சத்துகள், தாது உப்புக்கள் உடல் வளர்ச்சிக்கு உதவும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். ரத்த விருத்திக்கு உதவும். அனைவருக்கும் ஏற்ற எனர்ஜி இட்லி இது.
என்ன தேவை?
இட்லி – 6
கேரட் – 2
பீன்ஸ் – 7
நறுக்கிய முட்டைகோஸ் – ஒரு கைப்பிடி
குடமிளகாய் – ஒன்று
கடுகு, உளுத்தம்பருப்பு – சிறிதளவு
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – ஒன்று
மிளகாய்த்தூள் – சிறிதளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – 4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கேரட், பீன்ஸ், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கவும். குடமிளகாயைப் பெரிய துண்டுகளாக நறுக்கவும். இட்லியைச் சிறு துண்டுகளாக நறுக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, காய்கறிகள், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் தெளித்து, சிறு தீயில் 5 நிமிடங்கள் மூடி போட்டு வேகவிடவும். பிறகு, இட்லி துண்டுகளைப் போட்டு உடையாமல் புரட்டி, கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்கவும்.
குறிப்பு: