வற்றல் போடுவது சிரமம் என்று பலர் நினைக்கிறார்கள். கடைகளில் விற்கப்படும் வத்தல்களை வாங்கி பொரிக்கிறார்கள். ஆனால் வற்றல்கள் போடுவதும் மிக எளிதானவையே. அதற்கு உதாரணம் எளிமையாக செய்யப்படும் இந்த வரகு முறுக்கு வற்றல். நீங்களும் செய்து ஜமாய்க்க இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
வரகரிசி மாவு – 2 கப்
பொடித்த ஜவ்வரிசி – அரை கப்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக் கலக்கி, தேவையான நீர் சேர்த்துக் கலக்கி, கொதிக்க விடவும். நன்கு வெந்ததும், ஆற விட்டு ஓமப்பொடி பிழியும் அச்சில் மாவைச் சேர்த்துப் பிழிந்து காய விடவும். காய்ந்ததும் எடுத்து, தேவைப்படும் போது பொரித்தெடுக்கவும்.
INDvsAUS: மிரட்டிய ஸ்டார்க்… வெற்றியைத் தேடி தந்த ராகுல் – ஜடேஜா ஜோடி!
அதிமுகவுடன் கூட்டணி என்றால் ராஜினாமா… அண்ணாமலை அறிவிப்பு!