கிச்சன் கீர்த்தனா : மரவள்ளிக்கிழங்கு மசால் வடை

தமிழகம்

பள்ளியை விட்டு வரும் பிள்ளைகள் மட்டுமல்லர், அலுவலகத்தில் இருந்து வரும் பெரியவர்களும் வீட்டுக்குள் நுழைந்ததும், ‘சாப்பிட  ஏதாவது இருக்கா?’ என்று கேட்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் சூடான, சத்தான இந்த மரவள்ளிக்கிழங்கு மசால் வடை செய்து கொடுத்து அசத்தலாம்.

என்ன தேவை?

மரவள்ளிக்கிழங்கு – கால் கிலோ
ஊறவைத்த கடலைப்பருப்பு – 200 கிராம்
பச்சரிசி மாவு – ஒரு கைப்பிடி அளவு
இஞ்சி – ஒரு இன்ச் துண்டு (தோல் சீவவும்)
பூண்டு – 10 பல்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
பட்டை – சிறு துண்டு
கிராம்பு – 2
பச்சை மிளகாய் – 4
காய்ந்த மிளகாய் – 4
புதினா – ஒரு கைப்பிடி அளவு
வெங்காயம் – 100 கிராம் (நறுக்கவும்)
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – 500 மில்லி

எப்படிச் செய்வது?

மரவள்ளிக்கிழங்கைத் தோல் சீவி துருவிக் கொள்ளவும். ஊறவைத்த பருப்புடன் இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, கிராம்பு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். பின்பு அதில் துருவிய மரவள்ளிக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், புதினா, அரிசி மாவு சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் மாவை சிறு சிறு வடைகளாகத் தட்டி எடுக்கவும். மரவள்ளிக்கிழங்கு மசால் வடை தயார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘கோ பேக்’, ‘கம் பேக்’… – அப்டேட் குமாரு

ஆம்ஸ்ட்ராங் கொலை: நெல்சன் மனைவியிடம் விசாரணை – பின்னணி என்ன?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0