கிழங்குகளில் அதிக சுவையான மரவள்ளிக்கிழங்கில், ‘சிப்ஸை விட்டா அதுல வேறென்ன செய்யறது’ என கேட்போருக்கு இந்த அடை செய்து கொடுத்தால் ஆச்சர்யமடைவார்கள். இந்த மரவள்ளி கொத்தமல்லி கார அடை, இரவு நேர சிற்றுண்டியாகவும் அமையும்.
என்ன தேவை?
மரவள்ளிக்கிழங்கு – கால் கிலோ (துருவவும்)
பச்சரிசி – 250 கிராம்
கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு (சேர்த்து) – 200 கிராம்
காய்ந்த மிளகாய் – 6
இஞ்சி – ஒரு இன்ச் துண்டு (தோல் சீவவும்)
வெங்காயம் – ஒன்று
பூண்டு – 6 பல்
நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு கப்
எண்ணெய் – 500 மில்லி
உப்பு – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
அரிசி, பருப்பு வகைகளை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, பின்பு கழுவி வடித்து வைக்கவும். பின்பு அதில் இஞ்சி, காய்ந்த மிளகாய், வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். பின்பு அதில் துருவிய மரவள்ளிக்கிழங்கைச் சேர்த்து, ஒரு சுற்று சுற்றி பின்பு எடுத்து நறுக்கிய கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். தோசை தவாவில் எண்ணெய்விட்டு கொஞ்சம் கனமான அடைகளாக வார்த்து பொன்னிறமாகத் திருப்பிப் போட்டு எடுக்கவும். இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய்ச் சட்னி ஏற்றது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காந்தாரா – 1 : களரி கற்கும் ரிஷப் ஷெட்டி
ஆப்பிரிக்க வெற்றிக் கழகமா? அப்டேட் குமாரு