கிச்சன் கீர்த்தனா : ஸ்வீட் கார்ன் – வரகரிசி மசாலா பொங்கல்

Published On:

| By christopher

பொங்கல் என்றால் இனிக்கும் சர்க்கரைப் பொங்கல், நெய் சொட்டும் வெண் பொங்கல், பால் பொங்கல்… இவ்வளவுதான் நினைவுக்கு வருகிறதா? இனி… ஸ்வீட் கார்ன், வரகரசி போன்றவற்றோடும் பொங்கல் ருசிக்கும்; மணக்கும். அதற்கு இந்த ரெசிப்பி உதவும்.

என்ன தேவை?
வரகரிசி – ஒரு கப்
பாசிப்பருப்பு – கால் கப்
ஸ்வீட் கார்ன் முத்துகள் – முக்கால் கப்
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்  – தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)
கொத்தமல்லித்தழை, புதினா (சேர்த்து) – ஒரு கைப்பிடியளவு
தோல் சீவி, துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
நெய், உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?
வாணலியில் சிறிதளவு நெய்விட்டு வரகரிசி, பாசிப்பருப்பைச் சேர்த்து லேசாக வறுத்து எடுக்கவும். அதனுடன் 4 கப் தண்ணீர், ஸ்வீட் கார்ன், சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். பாதியளவு வெந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி, கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து மூடிப் போட்டு மிதமான தீயில் மீண்டும் வேகவிடவும். நன்கு வெந்த பிறகு கரம் மசாலாத்தூள், தேவையான அளவு உப்பு, நெய் சேர்த்துக் கிளறி, சூடாக வெள்ளரி அல்லது வெங்காயத் தயிர் பச்சடியோடு பரிமாறவும். சுவையான இந்தப் பொங்கலைச் சாமை அரிசியிலும் செய்யலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இதுக்கெல்லாம் வருத்தப்படலாமா? – அப்டேட் குமாரு

2025-ன் முதல் சட்டமன்றம்… ஆளுநர் அண்ட் எதிர்க்கட்சிகள் திட்டம் என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share