தினசரி கீரை சாப்பிட வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது. ஆனால், இன்றைய வாழ்க்கை முறையில் தினமும் கீரை வாங்கி சமைப்பது என்பது பலரால் முடிவதில்லை. இதற்கான தீர்வு என்ன? விளக்கமளிக்கிறார்கள், ஊட்டச்சத்து ஆலோசகர்கள்.
“இல்லத்தரசிகள் மட்டுமல்ல… அடிக்கடி வெளியூர் செல்பவர்கள், ஹாஸ்டலில் தங்கிப் படிப்போர், ஆற அமர சமைத்துச் சாப்பிட நேரமில்லாதோர் ஆகியோருக்கும் இந்தப் பிரச்சினை இருக்கிறது. வாரத்தில் மூன்று நாட்களுக்காவது கீரை சேர்த்துக் கொள்வது நல்லது என்றாலும் அது எல்லோருக்கும் சாத்தியப்படுவதில்லை என்பதுதான் நிஜம்.
இதற்கு சில மாற்றுகள் உள்ளன. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் புதினா – கொத்தமல்லி சட்னியைச் சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்தது, கறிவேப்பிலை பொடி. இது கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும். வீட்டிலும் எளிதாகத் தயாரித்து ஸ்டோர் செய்து கொள்ளலாம். இந்தப் பொடியை சூடான சாதத்தில் சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம். நீர் மோர், தயிர் போன்றவற்றில் கலந்து குடிக்கலாம்.
அதேபோல முருங்கை இலைப் பொடி கடைகளில் கிடைக்கிறது. அதையும் ஜூஸில் கலந்து குடிக்கலாம். இவை தவிர, பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் சூப்பர் க்ரீன் பொடி என்று கிடைக்கும். அதையும் ஜூஸ், ஸ்மூத்தி, மோர் போன்றவற்றில் கலந்து குடிக்கலாம். இந்தப் பொடிகளை எல்லாம் சின்னச் சின்ன ஸிப்லாக் கவர்களில் நிரப்பி எடுத்துச் சென்றால் பயணங்களின்போதும் ஆரோக்கியமாகச் சாப்பிட முடியும்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தீபாவளி முறுக்கு இன்னுமா இருக்கு: அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: கண்ணெதிரே அமைச்சருக்கு அவமரியாதை… வெகுண்டு எழுந்த உதயநிதி