சண்டே என்றால் ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்று காபி, டீ தானே ஆரோக்கியமற்றவை… ஜூஸ் ஆரோக்கியமானதுதானே என்ற எண்ணத்தில் பலரும் உணவுடன் ஏதோ ஒரு ஜூஸ் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
“இது தவறு” என்று சொல்லும் ஊட்டச்சத்து ஆலோசகர்கள், அதற்கான காரணத்தையும் விளக்குகிறார்கள்… “உணவுக்குப் பிறகு ஜூஸ் குடிப்பது என்பது கூடுதல் கலோரிகளைச் சேர்க்கவே காரணமாகும். அதிலும் பெரும்பான்மையானோர், பழங்களை அரைத்து, வடிகட்டி, சதைப்பகுதியைத் தூக்கிப்போட்டுவிட்டு, வெறும் சாற்றை மட்டும் குடிக்கிறார்கள்.
இதனால், பழத்தின் நார்ச்சத்து மொத்தமும் குப்பைக்குப் போகிறது. உண்மையில் நார்ச்சத்துதான் உடலுக்கு ஆரோக்கியமானது, அவசியமானது. ஆனால், நாம் அதற்கு பதிலாக வெறும் சாற்றில் சர்க்கரையைச் சேர்த்து இன்னும் கலோரிகளை ஏற்றிக் குடிக்கிறோம். அதனால், எப்போதுமே ஜூஸாக குடிப்பதைவிட பழங்களாகச் சாப்பிடுவதுதான் சிறந்தது.
அப்படிக் குடித்துத்தான் ஆக வேண்டும் என்றால், பழங்களை அரைத்து வடிகட்டாமல் ஸ்மூத்தியாகவும் குடிக்கலாம். இதையும் உணவு இடைவேளைகளில்தான் சாப்பிட வேண்டுமே தவிர, உணவுடன் சேர்த்துக் குடிக்கக்கூடாது. பழங்களையும் உணவு இடைவேளைகளில் எடுத்துக்கொள்வதுதான் சிறந்தது. குறிப்பாக… அதிக அளவு உணவு உண்ட பிறகு காபி, டீ, ஜூஸ், மசாலா பால் என எதையுமே குடிக்கக் கூடாது. வெந்நீர் அல்லது சாதாரண தண்ணீர் குடிக்கலாம். அது மட்டுமே போதுமானது” என்று அறிவுறுத்துகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இதெல்லாம் ஒரு பிரச்சனையா? – அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: பட்ஜெட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்- ஸ்டாலின், அமைச்சர்கள் ஆப்சென்ட் ஏன்?