நமது உணவில் மீன் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், மீனை விரும்பிச் சாப்பிடுபவர்கள்கூட, கருவாடு என்றால் வேண்டாம் என்று சொல்வது உண்டு. கருவாட்டின் மணமும், சுவையும் சிலருக்குப் பிடிக்காமல் இருப்பதே இதற்குக் காரணம்.
மீனை ஒப்பிடும்போது விலை குறைவு என்றாலும் கருவாட்டை அதிகம் வாங்குவதில்லை. அதே சமயம் கருவாடு பிரியர்கள் என்றால் ஒரு பிடி சோறு கூடுதலாகச் சாப்பிடுவார்கள்.
பொதுவாக 100 கிராம் மீனில் 15-20 கிராம் புரதச்சத்து காணப்படும். ஆனால், கருவாட்டில் 50 -70 சதவிகிதம் புரதச்சத்து காணப்படும்.
மீன் மற்றும் மீன் சார்ந்த உணவுப் பொருட்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் இருக்கும். கருவாட்டில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அழற்சி ஏற்படாமல் தடுக்கவும், இதய நலனுக்கும், மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும் உதவும். கலோரியும் குறைவாகவே காணப்படுகிறது.
கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம் போன்ற தாதுக்களும் கருவாட்டில் உள்ளன. இவை பற்கள், எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவும். நெத்திலி, மத்தி போன்ற சிறிய கருவாடுகளை அதன் முள்ளோடு சேர்த்து மென்று சாப்பிடுவதால் கால்சியம் சத்து கூடுதலாகக் கிடைக்கும். மேலும், பாஸ்பரஸ், வைட்டமின் டி, பி12 காணப்படுவதால் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கும்.
ஆனால், கருவாட்டில் உப்பு அதிகமாக உள்ளதால் தோல் நோய் உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். இவர்கள் குறைவான அளவே உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்.
அளவுக்கு அதிகமாக எடுக்கும்போது உடலில் சோடியம், பொட்டாசியத்தின் சமநிலை தவறி, உயர் ரத்த அழுத்தத்துக்கு வழிவகுக்கும். இதில் புரதச்சத்து அதிகம் உள்ளதால் தீவிர சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்களும் தவிர்க்க வேண்டும்.
கர்ப்பகால சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்ட பெண்களும் தவிர்க்க வேண்டும். பால், பால் பொருட்களுடன் சேர்த்துச் சாப்பிடும்போது ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். மேலும், கருவாட்டில் இருக்கும் சத்துகளை உடல் கிரகிக்க முடியாமல் போகும்” என்று அறிவுறுத்துகிறார்கள் ஊட்டச்சத்து ஆலோசகர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ரகுபதி Vs அண்ணாமலை… அமைச்சரா? பேட்டை ரவுடியா? முற்றும் மோதல்!
43 ஆண்டுகளுக்குப் பிறகு குவைத் பயணம்… 101 வயது முதியவரின் ஆசையை நிறைவேற்றிய மோடி