இந்த ஆண்டின் கடைசி வீக் எண்ட் ஸ்பெஷலாக என்ன செய்யலாம் என்று யோசிப்பவர்கள் சத்தான, வித்தியாசமான, சுவையான இந்த சுண்டல் வித் கோன் செய்து அசத்தலாம்.
என்ன தேவை?
பச்சைப்பயறு – ஒரு கப்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – கால் கப்
பட்டை – சிறிது
கிராம்பு – ஒன்று
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
கறிவேப்பிலை – சிறிது
கடுகு – அரை டீஸ்பூன்
எலுமிச்சை – அரை மூடி (சாறு எடுக்கவும்),
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.
கோன் செய்ய என்ன தேவை?
மைதா மாவு – அரை கப்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
எப்படிச் செய்வது?
கோன் செய்ய…
மைதா மாவு, சீரகம், உப்பு சேர்த்து அதில் நெய் சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து சின்ன சப்பாத்தியாக (வட்டமாக) தேய்த்து, கோன் மாதிரி மடித்து விளிம்பில் மைதா பசை கொண்டு ஒட்டவும். அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்க, கோன் ரெடி.
சுண்டல் செய்ய…
பச்சைப்பயறை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து முத்து முத்தாக வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பட்டை, கிராம்பு, இஞ்சி – பூண்டு விழுது, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் வேகவைத்த பாசிப்பயறை சேர்த்துக் கிளறி, எலுமிச்சைச் சாறு சேர்த்து புரட்டிவிட்டு இறக்கவும். இதை கோனில் நிரப்பினால், சுண்டல் வித் கோன் சாப்பிட ரெடி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியாணி கடையா…ரேஷன் கடையா: அப்டேட் குமாரு:
புத்தாண்டு கொண்டாட்டம்… : குளங்களின் மீது நடத்தப்படும் வன்முறை!