கிச்சன் கீர்த்தனா : ஸ்டஃப்டு கம்பு பரோட்டா

Published On:

| By christopher

மைதா என்றாலே பலரது நினைவுக்கும் உடனே வரும் உணவுப்பொருள் ‘பரோட்டா’. ஆனால் சிலர், ‘நான் மைதா உணவே எடுத்துக்கொள்வதில்லை, எப்போதாவது மாதம் ஒருமுறை மட்டுமே பரோட்டா. அதுவும் கோதுமை பரோட்டா தான்’ என்பார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த சத்தான ஸ்டஃப்டு கம்பு பரோட்டாவைச் செய்து ருசிக்கலாம்.
என்ன தேவை?
மேல் மாவுக்கு தேவையானவை
கோதுமை மாவு – அரை  கப்
கம்பு மாவு  – 1 கப்
உப்பு – தேவையான அளவு
ஸ்டஃபிங்க்கு தேவையானவை
பனீர் – 1 கப் துருவியது
கேரட் – கால் கப் துருவியது
தக்காளி – 1
உறைந்த அமெரிக்க சோளம் – 1/8 கப்
பொடியாக அரிந்த கொத்தமல்லித் தழை – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் – 2எப்படிச் செய்வது?
கோதுமை, கம்பு மாவு, உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசையவும். பனீர், காரட், கொத்தமல்லித் தழை, தக்காளி , சோளம், பச்சை மிளகாய் தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். பிசைந்து வைத்த மாவை சப்பாத்திக்கு செய்வது போல உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். இரண்டு உருண்டைகளை எடுத்து ஒவ்வொன்றையும் தனித்தனியாக 3 அங்குல அகல முள்ள சப்பாத்தியாக இடவும். ஒரு சப்பாத்தியின் நடுவில் 2 டேபிள் ஸ்பூன் ஸ்டஃபிங்கை சுற்றிலும் 1/4 அங்குல இடைவெளி இருக்கும்படி பரப்பவும். மற்றொரு சப்பாத்தியை அதன் மீது வைத்து ஓரங்களில் சிறிது தண்ணீர் தடவி ஒன்றோடு ஒன்றை ஒட்டி விடவும். நன்றாக மூடியவுடன் மாவில் புரட்டி எடுத்து கையால் தட்டிய பின்னர் குழவியால் மெதுவாக பெரிய கனமான சப்பாத்தியாக கவனமாக இடவும். இப்படி செய்த பரோட்டாவை சூடான தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு வேக வைக்கவும். ஒரு பக்கம் நன்கு வெந்ததும் திருப்பிப்போட்டு மறுபடியும் எண்ணெய் விடவும். பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தூங்கிக் கொண்டிருந்த எடப்பாடியை எழுப்பி விட்டது யார்? – அமைச்சர் நேரு பதிலடி!

சேலத்தில் கொடூரம்… அக்கா, தம்பி கொலை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel