வழக்கத்துக்கு மாறாக இந்த வருடம் வெயிலும் மழையும் அடுத்தடுத்து தொடர்கிறது. இந்த நிலையில் உடலை கூடுதல் அக்கறையுடன் பராமரிக்காவிட்டால் நோய்களிலிருந்து தப்பிக்க முடியாது. அதை எதிர்க்க தினசரி உணவுப் பழக்கத்திலேயே நோய் எதிர்க்கும் பொருள்களைச் சேர்த்துச் செய்து சாப்பிடுவதைப் பழக்கிக்கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு ஆரோக்கியமான இந்த சோயா பீன்ஸ் இட்லி நல்ல சாய்ஸாக இருக்கும். அனைவருக்கும் ஏற்ற நல்ல டயட் உணவு இது.
என்ன தேவை?
சோயா பீன்ஸ் – ஒரு கப்
வரகரிசி – ஒரு கப்
உளுத்தம்பருப்பு – அரை கப்
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சோயா பீன்ஸ், வரகரிசி இரண்டையும் கழுவி, ஒன்று சேர்த்து 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்னர் இட்லி மாவுப் பதத்தில் அரைத்துக்கொள்ளவும். உளுந்துடன் வெந்தயம் கலந்து அரை மணி நேரம் தனியாக ஊறவைத்து அவற்றையும் புசுபுசுவென மாவாக அரைத்துக் கொள்ளவும். பிறகு இந்த இரண்டு மாவுகளையும் ஒன்றுசேர்த்து, தேவையான உப்பு சேர்த்துக் கலந்து 2 மணி நேரம் புளிக்க வைக்கவும். பிறகு மாவை இட்லிகளாக வார்த்தெடுக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மீண்டும் அதே அல்வாவை கிண்டிருவாங்களோ? அப்டேட் குமாரு
சென்னையில் மீண்டும் மினி பஸ்… போக்குவரத்துக் கழகம் கட்டுப்பாடு!