கிச்சன் கீர்த்தனா: சிவப்பு அவல் உப்புமா

Published On:

| By christopher

உப்புமா என்றால் வேண்டாம் வெறுப்பவர்களுக்கு இந்த சிவப்பு அவல் உப்புமா செய்து கொடுங்கள். சிவப்பு அரிசியில் நிறைந்துள்ள கால்சியம் மற்றும் இரும்புச்சத்துகள் பல், எலும்புகளை வலுப்படுத்தும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். மேலும், ரத்தத்தில் ஆக்சிஜன் சீராகச் செல்ல வழிவகுக்கும். அனைவருக்கு ஏற்ற இந்த உப்புமா நாள் முழுக்க புத்துணர்ச்சியைத் தரும்.

என்ன தேவை?

சிவப்பு அவல் – ஒரு கப்

பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

காய்ந்த மிளகாய் – 2

கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்

வறுத்த வேர்க்கடலை – 6 டீஸ்பூன்

எலுமிச்சைச்சாறு – அரை டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் – 5 டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை – சிறிதளவு

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

சிவப்பு அவலுடன் சிறிதளவு சூடான தண்ணீரை ஊற்றி 5 நிமிடங்கள் மூடி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்துத் தாளிக்கவும். பிறகு, மிளகாயைக் கிள்ளிப் போட்டு,  வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர், ஊற வைத்த அவல், உப்பு சேர்த்து 3 நிமிடங்கள் சிறு தீயில் வைத்துக் கிளறவும். இறுதியாக வறுத்த வேர்க்கடலை, தேங்காய்த் துருவல், கொத்தமல்லி தூவி புரட்டி இறக்கவும். விரும்பினால் காய்கறிகள் (கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், குடமிளகாய்) சேர்த்தும் செய்யலாம்.

காமராஜர் பிறந்தநாள்: தளபதி விஜய் பயிலகம்! 

திமுக மதிப்பதே இல்லை: காங்கிரஸ் கூட்டத்தில் கரைச்சல்! 

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel