விடுமுறை நாட்கள் முடிந்த அடுத்த நாள், உடலையும் மனதையும் புத்துணர்வாக வைத்திருக்கப் பல வழிகளில் முயற்சி செய்கிறோம். உடற்பயிற்சி, டயட் என மெனக்கெடுகிறோம். அப்படிப்பட்ட நிலையில் காலை வேளையில் இந்த சங்குப்பூ டீ வைத்து அருந்துங்கள். சங்குப்பூ ரத்தக் குழாய் அடைப்பைச் சரி செய்யும். குடற்புழுக்களைக் கொல்லும். செரிமானத்துக்கு உதவும். தலைவலியைச் சீராக்கும். சோர்வைப் போக்கிப் புத்துணர்வு பெற உதவும்.
என்ன தேவை?
வயலட் கலர் சங்குப்பூ – 5
தண்ணீர் – 200 மில்லி
தேன் – 2 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – கால் டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
சங்குப்பூவை அலசி வைத்துக்கொள்ளவும். வாணலியில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவைத்து இறக்கவும். கொதித்த நீரில் சங்குப்பூவை போட்டு 10 நிமிடம் வாணலியை மூடி வைக்கவும். 10 நிமிடம் கழித்துத் திறந்து பார்த்தால் பூவில் உள்ள எசென்ஸ் நீரில் கலந்திருக்கும். பிறகு அந்த நீரை வடிகட்டி டம்ளரில் எடுத்துக்கொள்ளவும். இதனுடன் தேன், எலுமிச்சைச் சாறு கலந்து பருகவும்.
சனாதனமும், மூத்த அமைச்சரும்: இளைஞரணிக் கூட்டத்தில் உதயநிதி சொன்ன சீக்ரெட்!
33% இடஒதுக்கீடு: பெண் வாக்காளர்களை குறிவைக்கும் மோடி