தென்னிந்தியாவில் தயாரிக்கப்படும் விசேஷ பலகாரம் தட்டை. பொதுவாக அரிசி மாவு கொண்டு தயாரிக்கப்படும் தட்டையில் சத்தான சாமை மாவையும் கலந்து சுவையான தட்டை செய்ய இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
அரிசி மாவு – 1 கப்
உளுந்து மாவு – கால் கப்
பொட்டுக்கடலை மாவு – அரை கப்
சாமை மாவு – 1 கப்
கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் பொடி – 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
எப்படிச் செய்வது?
அரிசியைக் களைந்து சிறிது நேரம் ஊற விட்டு காய வைத்து மெஷினில கொடுத்து அரைத்து, சலித்து வைத்துக்கொள்ளவும். சாமை மாவை லேசாக சூடு வரும் வரை வறுத்துக் கொள்ளவும். உளுந்தை வெறும் சட்டியில் சிவப்பாக வறுத்து அரைத்துக் கொள்ள வேண்டும். கடலைப்பருப்பை ஊற வைத்து நீரை வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
அரிசி மாவு, சாமை மாவு, உளுத்த மாவு, பொட்டுக்கடலை மாவை ஒன்றாகச் சேர்த்து உப்புக், மிளகாய்ப்பொடி, பெருங்காயப் பொடி சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது தேவையான அளவுக்கு நீரைச் சேர்த்து மாவை நன்கு பிசையவும். ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றிக் காய வைக்கவும். எண்ணெய் தடவிய, ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் பிசைந்து வைத்த மாவை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு வட்ட வடிவில் குக்கி கட்டரை வைத்து சிறு தட்டையாக வெட்டிக்கொள்ள வேண்டும். தட்டையை ஒரு தோசைத் திருப்பியால் எடுத்துக் காயந்த எண்ணெயில் போட்டுப் பொரிக்கவும். இருபுறமும் சிவந்ததும் எடுத்து விடவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு உதயநிதி கொடுத்த மழை வாக்குறுதி!
சென்னையில் கனமழை: நைட்டு தான் இருக்கு ட்விஸ்ட்… பிரதீப் ஜான் வார்னிங்!