கிச்சன் கீர்த்தனா : ராஜ்மா புளிக்குழம்பு

Published On:

| By christopher

Kitchen Keerthana: Rajma Tamarind

வழக்கமாகக் கொண்டைக்கடலை, மொச்சை, பட்டாணி வகையில்தான் புளிக்குழம்பு வைப்பதுதான் வழக்கம் என்கிற நிலையில் ராஜ்மாவிலும் புளிக்குழம்பு வைத்து வீட்டிலுள்ளவர்களை அசத்தலாம். இந்தக் குழம்பு சாதத்துடன் மட்டுமல்ல… சப்பாத்தி, பரோட்டாவுக்கும் தொட்டுக் கொள்ள தோதாக அமையும்.

என்ன தேவை?
வேகவைத்த ராஜ்மா – அரை டம்ளர்
வேகவைத்த சேப்பங்கிழங்கு – 3
புளி – சிறிய எலுமிச்சை அளவு
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்)
தக்காளி – ஒன்று (அரைக்கவும்)
நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன்
வறுத்துப் பொடிக்க…
மல்லி (தனியா) – ஒரு டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
தேங்காய் – 3 பத்தை
சீரகம் – அரை டீஸ்பூன்
தாளிக்க…
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
பூண்டு – 3 பல் (நறுக்கவும்)
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

எப்படிச் செய்வது?
ராஜ்மாவை இரவில் ஊறவைக்கவும் (சுமார் எட்டு மணி நேரம்). காலையில் குக்கரில் வேகவைக்கவும். சேப்பங்கிழங்கை மீடியம் சைஸாக நறுக்கி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். காய்ந்த மிளகாய், மல்லி, சீரகத்தை வறுத்து தேங்காயுடன் சேர்த்து கொரகொரப்பாகப் பொடித்துக்கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய்விட்டு சூடாக்கி, காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்துத் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அரைத்த தக்காளியைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் குறைவான தீயில் வதங்கவிட்டு, வேகவைத்து வைத்துள்ள ராஜ்மா மற்றும் சேப்பங்கிழங்கைச் சேர்த்து வதக்கி கொதிக்கவிட்டு, புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு சேர்த்து, கொரகொரப்பாக பொடித்து வைத்துள்ளதையும் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

எல்லாம் சேர்ந்து கொதித்து குழம்பு பதம் வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். சுவையான ராஜ்மா புளிக்குழம்பு ரெடி. பரிமாறும்போது பொடியாக நறுக்கிய வெங்காயம், இரண்டாக வெட்டிய எலுமிச்சைப்பழத்தை மேலே பிழிந்து சாப்பிட்டால் அதிக ருசியாக இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இவரு பெரிய அமெரிக்க ஜனாதிபதி! – அப்டேட் குமாரு

கோவையில் தங்க நகை தொழிற்பூங்கா… ஸ்டாலின் கொடுத்த நம்பிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share