கிச்சன் கீர்த்தனா : ராஜ்மா பராத்தா

Published On:

| By christopher

Kitchen Keerthana: Rajma Paratha

100 கிராம் ராஜ்மாவில் மாவுச்சத்து 60.6 கிராம், புரதம் 22.9 கிராம், நார்ச்சத்து 4.8 கிராம், தாதுக்கள் 3.2 கிராம், கொழுப்பு 1.3 கிராம் அடங்கியுள்ளன. அப்படிப்பட்ட ராஜ்மாவில் இந்த வார வீக் எண்ட் ஸ்பெஷலாக பராத்தா செய்து அசத்த இந்த ரெசிப்பி உதவும்.

என்ன தேவை?

பராத்தா தயாரிக்க…

கோதுமை மாவு – 2 டம்ளர்
சர்க்கரை – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கருஞ்சீரகம் – அரை டீஸ்பூன்
பால் – கால் டம்ளர்
தண்ணீர் – அரை டம்ளர் + தேவைக்கேற்ப
நெய் – அரை டீஸ்பூன்

ஃபில்லிங் செய்ய…

நன்கு வேகவைத்த ராஜ்மா – அரை கப்
வேகவைத்த உருளைக்கிழங்கு – ஒன்று (மீடியம் சைஸ்)
பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி (துருவியது) – அரை டீஸ்பூன்
ஓமம் – கால் டீஸ்பூன்
சீரகம் – ஒரு சிட்டிகை
எண்ணெய் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
ஆம்சூர் பவுடர் – கால் டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை – கால் கப்

எப்படிச் செய்வது?

கோதுமை மாவில் உப்பு, சர்க்கரை, கருஞ்சீரகம், நெய் சேர்த்துக் கலந்து, பால் மற்றும் தண்ணீரை லேசாக சூடுபடுத்தி மாவில் ஊற்றி, ஒரு ஃபோர்க்கால் கிளறி ஒரு நிமிடம் மூடி வைக்கவும். பிறகு மீண்டும் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும். மாவை சிறிது நேரம் மூடி வைக்கவும்.

ஃபில்லிங் தயாரிக்க…

வேகவைத்த ராஜ்மாவையும் உருளைக்கிழங்கை யும் ஒன்றாகச் சேர்த்து மசித்து வைக்க வும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடு படுத்தி ஓமம், சீரகம் சேர்த்துத் தாளித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சியை சேர்த்து வதக்கவும். ராஜ்மா மற்றும் உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்கு கிளறி அதில் உப்பு மற்றும் ஆம்சூர் பொடி சேர்த்து, கடைசியாக கொத்துமல்லித்தழை தூவி கிளறி ஆறவைக்கவும். ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.

பராத்தா செய்ய…

பிசைந்த கோதுமை மாவை சரிபாகமாக ஆறு உருண்டைகளாகப் பிரித்து, ஒரு உருண்டை எடுத்து சிறிதளவு மாவு தோய்த்து சிறிது வட்ட வடிவமாக திக்காக உருட்டி அதில் நாம் ஏற்கெனவே செய்து வைத்துள்ள ராஜ்மா ஃபில்லிங் உருண்டையை நடுவில் வைத்து மாவைக்கொண்டு ஃபில்லிங்கை மூடி நன்கு உருட்டி மீண்டும் சப்பாத்தி கட்டையில் வைத்து மெதுவாக பராத்தாவை வட்ட வடிவத்தில் பரத்தவும். ஒரு இரும்பு தவாவைச் சூடுபடுத்தி பாராத்தாவை போட்டு, சுற்றிலும் நெய்விட்டு இரண்டு பக்கமும் நன்கு வேகவைத்து எடுக்கவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டிஜிட்டல் திண்ணை: விஜய்யுடன் ஒரே மேடையா? திருமா பற்றி ஸ்டாலின் ரியாக் ஷன்!  நள்ளிரவு அறிக்கையின் பின்னணி!

லிங்க் இருந்தா அனுப்புங்க : அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share