உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கான நார்ச்சத்தும் சீனியர் சிட்டிசன்களின் எலும்புகளை வலுப்படுத்தி மூட்டுவலி வராமலும் எலும்புகள் தேய்மானம் ஆகாமலும் தடுக்கும் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துகளும் ராஜ்மாவில் நிறைந்துள்ளன. அத்தகைய ராஜ்மாவில் மசாலா செய்து வீட்டிலுள்ளவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்களேன். இந்த மசாலா சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
என்ன தேவை?
வேகவைத்த ராஜ்மா – 100 கிராம்
வறுத்துப் பொடிக்க…
மிளகு – அரை டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
சோம்பு – அரை டீஸ்பூன்
கிராம்பு – ஒன்று
காய்ந்த மிளகாய் – ஒன்று
மல்லி (தனியா) – 2 டீஸ்பூன்
தாளிக்க…
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
புதினா – 8 இதழ்கள்
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெங்காயம் – ஒன்று மீடியம் (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
சில்லி ஃப்ளேக்ஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்
ஒரிகானோ – 2 டீஸ்பூன்
தக்காளி சாஸ் – தேவைக்கேற்ப
மொசரெல்லா சீஸ் – தேவைக்கேற்ப
ஆலிவ் ஆயில், உப்பு – தேவையான அளவு
வெண்ணெய் – 6 டேபிள்ஸ்பூன்
எப்படிச் செய்வது?
வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ளவற்றைப் பொடித்துக்கொள்ளவும். ஒரு கடாயில் வெண்ணெயைச் சேர்த்து சூடாக்கி வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். வறுத்துப் பொடித்த பொடி, சேர்த்து நன்கு கிளறி வெந்த ராஜ்மாவையும் சேர்த்து நன்கு புரட்டி சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மசாலா முழுவதும் ராஜ்மாவுடன் ஒன்றாகச் சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
த்ரிஷா இல்லனா நயன்தாரா: அப்டேட் குமாரு
அரசு ஊழியர்கள் மீது ED வழக்கு தொடர முன் அனுமதி தேவை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!