கிச்சன் கீர்த்தனா : ராஜ்மா கட்லெட்

Published On:

| By christopher

Kitchen Keerthana: Rajma Cutlet

ராஜ்மாவில் அளவில் சிறிய வகையும் உண்டு. அது, பெரிய ராஜ்மாவைவிட வேகமாக வெந்துவிடும். ராஜ்மாவை உபயோகித்து சுண்டல், கிரேவி, தால் மட்டுமல்ல… கட்லெட்டும் செய்து அசத்தலாம். இது மாலை நேர சிற்றுண்டியாக வீட்டிலுள்ளவர்களை ரசித்து, சுவைக்க வைக்கும்.

என்ன தேவை?

வேகவைத்த ராஜ்மா – 100 கிராம்
வேகவைத்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு – 25 கிராம்
வேகவைத்த கேரட் – 25 கிராம்
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பூண்டு – 2 பல் (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்
இஞ்சி (துருவியது) – அரை டீஸ்பூன்
சில்லி ஃப்ளேக்ஸ் – கால் டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

கட்லெட் கோட்டிங் கொடுக்க…

கார்ன்ஃப்ளார் – 2 டீஸ்பூன்
மைதா – ஒரு டீஸ்பூன்
பிரெட் கிரம்ஸ் – கால் கப்
ஓட்ஸ் – 2 டேபிள்ஸ்பூன்
ரவை – 2 டீஸ்பூன்
மிளகுத்தூள், மிளகாய்த்தூள், உப்பு – சிறிதளவு

எப்படிச் செய்வது?

ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், துருவிய இஞ்சி சேர்த்து தாளிக்கவும். பிறகு சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு சேர்த்து வதக்கி, வேகவைத்த ராஜ்மா சேர்த்து நன்கு கிளறி ஆறவைக்கவும். சர்க்கரைவள்ளிக்கிழங்கு மற்றும் கேரட்டை வேகவைத்து மசித்து வைக்கவும். இதை ராஜ்மா கலவையுடன் சேர்த்து கொத்தமல்லித்தழையைப் பொடியாக நறுக்கி சேர்த்து அத்துடன் கரம் மசாலாத்தூள் மற்றும் சாட் மசாலாவைச் சேர்த்து நன்கு பிசறி வைக்கவும்.

கோட்டிங் கொடுக்க…

மைதாவையும் கார்ன் மாவையும் சேர்த்து அதில் சிறிதளவு உப்பு, மிளகுத்தூள் போட்டு தண்ணீர் ஊற்றி கட்டியாகக் கலக்கி வைக்கவும். பிரெட் கிரம்ஸ் உடன் ரவை மற்றும் ஓட்ஸைக் கலந்து அதில் சிறிதளவு மிளகாய்த்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும்.

ராஜ்மா கலவையைச் சிறு உருண்டைகளாக உருட்டி, வேண்டிய வடிவில் ஷேப் செய்து மைதா – கார்ன் கலவையில் தோய்த்து, பிரெட் கிரம்ஸ் – ஓட்ஸ் – ரவை கலவையில் நன்கு கோட்டிங் கொடுத்துப் புரட்டி தட்டில் அடுக்கிவைத்து சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். தவாவை சூடுபடுத்தி எண்ணெய்விட்டு கட்லெட்டைப் போட்டு இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு மொறுமொறுப்பாக எடுக்கவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அதிவிரைவு அமைச்சர் சிவசங்கர்… திண்டாட்டமில்லா தீபாவளி பயணம்!

டிஜிட்டல் திண்ணை:  விளாசிய ஸ்டாலின்… விஜய்க்கு பதிலடி..  நவம்பர் 27-இல் திமுக திட்டமிடும் சம்பவம்! 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share