நம் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் ஏற்றது ராஜ்கிரா என்கிற முளைக்கீரை விதை. இந்த ராஜ்கிராவில் செய்யப்படும் பர்ஃபி வட மாநிலங்களில் மிகப் பிரபலமான ஒன்று. இங்கும் ஆர்கானிக் கடைகளில் கிடைக்கிறது. பொரியாகவும் கிடைக்கிறது; விதையாகவும் கிடைக்கிறது. ராஜ்கிரா பொரி கிடைக்காதவர்கள் ராஜ்கிரா விதையை ஒரு கப் அளவு எடுத்துக் கொள்ளவும். ராஜ்கிரா விதையை வெறும் வாணலியில் பொரித்தால் அது நன்கு பொரியும். எல்லா விதைகளையும் பொரித்துக்கொண்டு பெரிய கண்ணுள்ள சல்லடையில் சலித்தால் பொரி மேலே நிற்கும். விதை கீழே விழும். அதை வைத்து இந்த பர்ஃபி செய்யலாம். இந்த வீக் எண்டை ஸ்பெஷலாக்க விரும்புபவர்கள் இந்த ராஜ்கிரா பர்ஃபி செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்தலாம்.
என்ன தேவை?
ராஜ்கிரா பொரி – ஒன்றரை கப்
துருவிய வெல்லம் – ஒரு கப்
முந்திரி – கால் கப் (விருப்பப்பட்டால்)
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
எப்படிச் செய்வது?
ஒரு கடாயில் நெய், வெல்லம், உப்பு சேர்த்து அடுப்பில் வைத்துச் சூடாக்கவும். பாகு நுரைத்து ஒரு கம்பிப் பதம் வந்தவுடன் ராஜ்கிரா பொரி, உடைத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி நெய் தடவிய டிரேயில் ஊற்றி, துண்டுகள் போடவும். பர்ஃபி வட்டமாக வேண்டுமென்றால் சிறிய டப்பா மூடி அல்லது வட்டமான குக்கி கட்டரால் கட் செய்து எடுக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முதலீட்டாளர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த கிஃப்ட் பாக்ஸில் இருப்பது என்ன?
உத்தரவை மீறினால் ஃபார்முலா 4 கார் ரேஸுக்கு ரெட் கார்டு: உயர்நீதிமன்றம் அதிரடி!