வெள்ளரி குடும்பத்தைச் சார்ந்தது புடலங்காய். கோடைக்கு ஏற்ற நீர்ச்சத்து நிறைந்த இதை பொரியல், கூட்டு என்று செய்யாமல் ராய்த்தா செய்தும் சுவைக்கலாம். மருத்துவ குணங்கள் நிறைந்த புடலங்காய் எல்லாருக்கும் ஏற்றது. எளிதில் ஜீரணமாகக்கூடியது.
என்ன தேவை?
இளசான புடலங்காய் – ஒன்று
பச்சை மிளகாய் – 2
சின்ன வெங்காயம் – 8
கடுகு – அரை டீஸ்பூன்
உளுந்து – ஒரு டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்
கெட்டித் தயிர் – ஒரு கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
புடலங்காய், சின்ன வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். இத்துடன் புடலங்காயை சேர்த்து லேசாக வதக்கி, தேங்காய்த் துருவல் சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும். இதனைப் பரிமாறும்போது கெட்டித் தயிர், உப்பு சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இது ‘கச்சத்தீவு’ டைவர்சன் : அப்டேட் குமாரு
MS Dhoni: தோனிக்கு மீண்டும் காயமா? வெளியான அதிர்ச்சி வீடியோ!