கிச்சன் கீர்த்தனா : பிரண்டைச் சட்னி

Published On:

| By christopher

உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கும்; ஞாபகசக்தியைப் பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும்; எலும்புக்கு சக்தி தரும்; வாய்வுப் பிடிப்பை நீக்கும் சக்தி பிரண்டைக்கு உண்டு. அப்படிப்பட்ட பிரண்டையில் சட்னி செய்து வீட்டிலுள்ளவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த ரெசிப்பி உதவும். இந்தச் சட்னி இட்லி, தோசையுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

என்ன தேவை?
கடலைப்பருப்பு – 60 கிராம்
கறுப்பு உளுந்து – 60 கிராம்
காய்ந்த மிளகாய் – 4 – 6
தேங்காய் – அரை மூடி (துருவவும்)
உப்பு – தேவையான அளவு
இஞ்சி – கால் இன்ச் துண்டு
கறிவேப்பிலை – ஓர் ஆர்க்கு
எண்ணெய் – தேவையான அளவு

தாளிப்பதற்கு…
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஓர் ஆர்க்கு

சட்னிக்கு…
பிரண்டை – ஒரு கைப்பிடி அளவு
உப்பு – சிறிதளவு

எப்படிச் செய்வது?
வாணலியில் சிறிது சிறிதாக எண்ணெய்விட்டு சூடானதும்  முதலில் குறிப்பிட்டுள்ள  எல்லா தேவையான பொருள்களையும் தனித்தனியாக வதக்கி, பொன்னிறமாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு சூடு ஆறியதும், அவற்றைத் தண்ணீர்விடாமல், மிகவும் நைஸாக இல்லாமல்… அதாவது, சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையைத் தாளித்து, அரைத்து வைத்துள்ள இன்ஸ்டன்ட் சட்னி மிக்ஸில் சேர்த்துக் கலக்கவும். இதை ஒரு கண்ணாடி ஜாரில் போட்டு மூடி, ஃப்ரீசரில் ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம்.

சட்னி செய்ய…
முதலில் பிரண்டையை நன்கு கழுவி, அதன் மேலுள்ள தோலை உரித்து சுத்தம் செய்து உள்ளிருக்கும் தண்டுப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும். சிறிதளவு எண்ணெயில் பிரண்டையைச் சற்று வறுத்துக்கொள்ளவும். சூடு ஆறியதும், சிறிதளவு உப்பு, தண்ணீர் மற்றும் இன்ஸ்டன்ட் சட்னி பொடி மிக்ஸ் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக்கொள்ளவும். பிரண்டைச் சட்னி நிமிடங்களில் ரெடி.

குறிப்பு: பிரண்டை அரிக்கும் தன்மையுடையது. அதை வதக்கும்போது நன்கு வதக்க வேண்டும். பிரண்டையைத் தோல் உரித்து சுத்தம் செய்யும்போது, கையில் சிறிதளவு நல்லெண்ணெயைத் தடவிக்கொள்ளவும். இதில் பெரிய வெங்காயம், முழு வர மல்லி வறுத்து சேர்த்து அரைத்தாலும், சுவை மிகவும் நன்றாக இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அதிமுக – பாஜக கூட்டணி? டிடிவி தினகரனுக்கு ஜெயக்குமார் பதில்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக கூட்டணி வசமாகும் – ஸ்டாலின் நம்பிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share